ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்துக்குட்ட சுன்னப்பள்ளி பகுதியை சேர்ந்த மீனவர்கள் சில நாட்களுக்கு முன் கடலில் மீன் பிடிக்க சென்றனர். நேற்று மாலை அவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, தங்க நிறத்திலான பிரம்மாண்ட பொருள் ஒன்று கடலில் மிதந்து கொண்டிருப்பதை கண்டு அவர்கள் அதிசயித்தனர்.
படகில் அதன் அருகே சென்று பார்த்தபோது அது தங்கமுலாம் பூசப்பட்ட தேர் என்பது தெரிய வந்தது. உடனே அதனை கஷ்டப்பட்டு தங்களது படகில் ஏற்றி சுன்னப்பள்ளி கடற்கரைக்கு மீனவர்கள் கொண்டு வந்தனர்.
தகவல் அறிந்து வந்த கடலோர காவல் படை அதிகாரிகள், படகிலிருந்த தேரை மீட்டு ஆய்வு செய்தனர். அப்போது தேரின் மீது வெளிநாட்டு மொழியில் வாசகங்கள் எழுத்தப்பட்டிருந்தன. அந்த எழுத்துக்கள் ஜப்பான் அல்லது மலேசிய நாட்டு எழுத்துக்களாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அதில் 16.1..22 என எழுதப்பட்டிருந்தது.
தேரில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை கொண்டு அது எந்த நாட்டை சேர்ந்தத, எங்கிருந்து அது கடலில் மிதந்து வந்தது என விசாரித்து வருகின்றனர்.
அசானி புயல்
தற்போது ஆந்திராவில் கரையை கடப்பதால் கடல் சீற்றம் காரணமாக தேர் கடலில் மிதந்து வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.