கர்நாடகா மாநிலம் மால்பே கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மாநிலத்தின் முதல் மிதக்கும் பாலத்தை கடந்த 6-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த பாலத்தை உடுப்பி எம்எல்ஏ ரகுபதி பத் திறந்து வைத்தார். சுற்றுலாப் பயணிகள் இந்த பாலத்தில் 15 நிமிடங்களுக்கு ரூ.100 கட்டணத்தில் சிறப்பு அனுபவத்தை உணரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மிதக்கும் பாலம் 100 மீட்டர் நீளமும் 3.5 மீட்டர் அகலமும் கொண்டது. இது அதிக அடர்த்தி கொண்ட போண்டோன்ஸ் எனப்படும் மூலப் பொருள் மூலம் செய்யப்பட்டுள்ளது. பாலத்தின் முடிவில் 12.5 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகலமும் கொண்ட தளத்தில் சுற்றுலா பயணிகள் 15 நிமிடங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், இந்த மிதக்கும் பாலம் அங்கு ஏற்பட்ட சூறாவளி காற்று காரணமாக, திறக்கப்பட்ட மூன்று நாட்களில் சேதமடைந்துள்ளது. இந்த மிதக்கும் பாலத்தின் செயல்பாடு காலநிலை மாற்றம் காரணமாக சேதமடைந்தததை அடுத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பெங்களூருவின் பல பகுதிகளில் கனமழை பெய்ததை அடுத்து மரங்கள் வேரோடு சாய்ந்தன, சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளன. சமீபத்தில் திறக்கப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியம் உட்பட நகரம் முழுவதும் சில உள்கட்டமைப்புகள் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது. 100 மீட்டர் நீளமும், 3.5 மீட்டர் அகலமும் கொண்ட இப்பாலம் ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.. இலங்கை வன்முறை- தமிழகத்திற்கு உளவுத்துறை எச்சரிக்கை