குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு! இனிமேல் இதனை நிச்சயம் அணியக் கூடாது – முக்கிய அறிவிப்பு

வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வில் தேர்வர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை விதிக்கப்படுவதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேர்காணல் உள்ள குரூப் 2 பணியிடங்களில் 116 காலிப்பணியிடங்களையும், நேர்காணல் இல்லாத குரூப் 2 ஏ பணியிடங்களில் 5 ஆயிரத்து 413 காலியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை பிப்ரவரி 23ந் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்த பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு இம்மாதம் 21ம் தேதி நடக்கிறது.
BREAKING!! TNPSC குரூப் 2 தேர்வு அட்டவணை , விதிமுறைகள் வெளியீடு!!
முதல்நிலைத் தேர்வுகள் 200 கேள்விகள் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்களுக்கு கொள்குறிவகையில் 3 மணி நேரம் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் குரூப் 2 தேர்வர்களுக்கு புது அறிவிப்பு ஒன்றை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில் குரூப் 2 தேர்வெழுத வரும் தேர்வர்கள் முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்வறையில் தேர்வு எழுதும் போதும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிந்து தேர்வறைக்கு செல்ல தடை விதிப்பதாகவும் அறிவித்துள்ளது.
BREAKING!! TNPSC குரூப் 2 தேர்வு அட்டவணை , விதிமுறைகள் வெளியீடு!!
முன்னதாக குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியானது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள்‌ (Hall Ticket) தேர்வாணையத்தின்‌ இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in வழியாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.