கொழும்பிலிருந்து அவரசமாக மகிந்த வெளியேற்றப்பட்டது ஏன்? பாதுகாப்பு தரப்பு விளக்கம்



பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியதும், மகிந்த விரும்பும் இடத்திற்கு மாற்றப்படுவார் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

மகிந்த அலரி மாளிகையில் இருந்த போது ஆயிரக்கணக்கானவர்களினால் சுற்றிவளைக்கப்பட்டிருந்ததாகவும், அவரைப் பாதுகாக்கும் விதமாக தற்காலிகமாக குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு மகிந்த குடும்பம் திருகோணமலை கடற்படை தளத்தில் தங்கவைக்கப்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு, நிதி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மீண்டும் தான் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை கடற்படை முகாமில் மகிந்த குடும்பம் தஞ்சம் அடைந்துள்ளதாக ஏற்கனவே வெளியான செய்திகளை இன்று பாதுகாப்பு செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.