டெல்லி: கோடை வெயில் அதிகரிக்கும் நிலையில் பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தல் செய்துள்ளது. வகுப்புகளை காலை 7 மணிக்கு தொடங்கி, மதியத்திற்குள் நடத்தி முடிக்கலாம் என கூறியுள்ளது. விளையாட்டு போன்ற நிகழ்வுகளை காலை நேரத்திலேயே முடிக்கவும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் பள்ளி வகுப்புகளை காலை 7 மணிக்கு தொடங்கி நண்பகலுக்குள் முடிக்கலாம் என கூறியுள்ளது. பள்ளியில் காலையில் நடத்தப்படும் வழிபாட்டை நிழலாக உள்ள இடத்தில் நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. பள்ளி வாகனங்களில் அதிக அளவிற்கு மாணவர்களை ஏற்றக்கூடாது என்றும் அதில் முதலுதவி பெட்டி அவசியம் என்றும் கூறியுள்ளது. மேலும் முடிந்தளவு தங்கள் குழந்தைகளை பெற்றோர்களே அழைத்து வரலாம் என்று ஒன்றிய அரசு யோதனை தெரிவித்துள்ளது. கடுமையான வெப்பம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு நேரத்தில் வந்தால் மட்டும் போதும் என கூறியுள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 14-ந் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் (ஜூன்) 13-ந் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து மாணவர்கள் தேர்வு நாட்களில் மட்டும் வந்தால் போதும் எனவும் கூறியுள்ளது.