இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச-வின் பிரத்யேக சிறப்பு காணொளி TV டெரானா மற்றும் அடா டெரானா 24×7 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கட்டுப்படுத்த முடியாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து, அதிபர் மற்றும் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் தீவிரமான போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த போராட்டமானது கடந்த திங்கள் கிழமை வன்முறையாக வெடித்ததை தொடர்ந்து, பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஆனால் அதன்பிறகும் வன்முறை சம்பவங்கள் முடிவுக்கு வராத நிலையில், தற்போது இலங்கையின் அதிபர் கோட்டாபய ராஜபக்ச-வும் பதவியில் இருந்து விலகவேண்டும் என அரசு-எதிர்ப்பு போராட்டகாரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச-வின் சிறப்பு பிரத்யேக காணொளி இரவு 9 மணிக்கு TV டெரானா மற்றும் அடா டெரானா 24×7 ஆகிய தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன.
A special statement by Gotabaya Rajapaksa will be telecast at 9 PM on TV Derana and Ada Derana 24×7.
— Roel Raymond (@roelraymond) May 11, 2022
கூடுதல் செய்திகளுக்கு: பொதுமக்களிடம் உதவி கோரிய இலங்கை பொலிஸார்: வன்முறையை கட்டுப்படுத்த அதிரடி உத்தரவு!
இலங்கையில் ஏற்பட்ட பயங்கரமான வன்முறைக்கு பிறகு அதிபர் கோட்டாபய ராஜபக்ச பொதுமக்களுக்கு வழங்கும் முதல் செய்தி இதுவாகும்.