சென்னை:
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிகம் கேள்வி கேட்ட எம்எல்ஏக்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று (ஏப்ரல் 10ந்தேதி) முடிவடைந்தது. 22 நாட்கள் நடைபெற்ற இந்த மானிய கோரிக்கை அமர்வில், தினசரி துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் நிதிஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன. 50க்கும் மேற்பட்ட மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப் பட்டன.
இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக கூறிய பேரவை தலைவர் சபாநாயகர் அப்பாவு, இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 22 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டது என்றும், மேலும் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிகம் கேள்வி கேட்ட எம்எல்ஏக்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி 8 ஆயிரத்து 446 கேள்விகள் கேட்டு முதலிடத்திலும், பாமக தலைவர் ஜிகே மணி 8 ஆயிரத்து 312 கேள்விகள் கேட்டு இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 3வது இடத்தை திமுகவைச் சேர்ந்த பிரபாகர ராஜாவும் 4 மற்றும் 5வது இடங்களை பாமக எம்.எல்.ஏக்களான அருள், சிவக்குமார் ஆகியோர் பிடித்துள்ளனர்.