சிங்கப்பூர்:சிங்கப்பூரில் லஞ்சம் தர முயன்ற இந்திய வம்சாவளிக்கு நான்கு வாரங்கள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தென் கிழக்காசிய நாடான சிங்கப்பூரில் லஞ்சம் கொடுத்தால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது.இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான கிருஷ்ணா ராவ் நரசிம்ம நாயுடு, குடி போதையில் கார் ஓட்டி விபத்தில் சிக்கியுள்ளார். போலீஸ் விசாரணையின்போது குற்றத்தை மறைக்க, 3,000 ரூபாய் லஞ்சம் தர முயன்றுள்ளார். இதை ஏற்க மறுத்த போலீஸ் அதிகாரி, குடி போதையில் கார் ஓட்டியது; லஞ்சம் தர முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகளில் வழக்குப் பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரித்த சிங்கப்பூர் உயர் நீதிமன்றம், கிருஷ்ணா ராவுக்கு நான்கு வாரங்கள்சிறைத் தண்டனையும், 2.80 லட்சம் ரூபாய்அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் லஞ்சம் தர முயன்ற இந்திய வம்சாவளிக்கு நான்கு வாரங்கள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.தென் கிழக்காசிய நாடான சிங்கப்பூரில் லஞ்சம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.