சீன அதிபர் ஜி ஜின் பிங், மூளையில் உள்ள ரத்த நாளத்தில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில், cerebral aneurysm எனப்படும் ரத்த நாள வீக்கத்தால் அவர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பாதிப்புக்கு அவர் அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள விரும்பவில்லை எனவும் பாரம்பரிய சீன மருத்துவத்தின் மூலம் ரத்த நாளத்தில் ஏற்பட்டிருக்கும் வீக்கத்தை சரி செய்ய அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
68 வயதான ஜி ஜின் பிங் இந்த ஆண்டு இறுதியில், தொடர்ந்து மூன்றாவது முறையாக சீன அதிபராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது உடல்நிலை குறித்த செய்திகள் பரவி வருகின்றன.