சூப்பரான அரசு வேலை; 50 பணியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்!

Sivaganga and Nagappattinam BC/MBC hostel staff recruitment 2022 apply soon: தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ், சிவகங்கை மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர தூய்மை பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 50 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.05.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பகுதி நேர தூய்மைப் பணியாளர் (Cleaning Staff)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 50

சிவகங்கை : 19 (ஆண் – 22, பெண் – 14)

நாகப்பட்டினம் : 15 (ஆண் – 6, பெண் -8)

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

தொகுப்பூதியம் : ரூ. 3,000

வயதுத் தகுதி : 01.07.2022 அன்று விண்ணப்பதாரர் 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் BC/MBC/DNC பிரிவினர் 32 வயது வரையிலும், SC/ST பிரிவினர் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2022/05/2022051044.pdf அல்லது https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2022/05/2022051059.pdf என்ற இணையதளப்பக்கங்களில் அறிவிப்புக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

சிவகங்கை : மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிவகங்கை

இதையும் படியுங்கள்: தமிழக அரசு வேலை; கல்வி விடுதிகளில் 34 பணியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்!

நாகப்பட்டினம் : மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், அறை எண் – 222, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.05.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2022/05/2022051038.pdf அல்லது https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2022/05/2022051061.pdf என்ற இணையதளப் பக்கங்களைப் பார்வையிடவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.