சென்னையில் மோட்டார் சைக்கிள் வீராங்கனை ஒருவர், நள்ளிரவில் தன்னை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் தன்னிடம் அத்துமீறியதாக சமூக வலைதளம் மூலம் புகாரளித்த நிலையில், புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த பெண் நேற்றிரவு நண்பர்களை சந்தித்து விட்டு வீடு திரும்பும் போது அசோக் பில்லர் பகுதியில் இருந்து பின் தொடர்ந்து வந்த மர்ம நபர், தன் கையை பிடித்து இழுத்து செல்போனை பறிக்க முயன்றதாக டுவிட்டரில் பதிவிட்டார்.
அச்சமயம் தான் எஸ்.ஓ.எஸ் செயலி மூலம் புகாரளிக்க முயன்றதாகவும் எந்த பதிலும் கிடைக்கவில்லை எனவும் அந்த நபரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி உள்ளிட்டோரை டேக் செய்து டுவீட் செய்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக ஆதாரங்களை சேகரித்து விட்டதாகவும், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.