டாலர் ஆதிக்கம்.. பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு என்ன தெரியுமா..?!

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கையில் 0.50 சதவீத வட்டியை உயர்த்திய நிலையில், உலக நாடுகளில் இருந்த டாலர் முதலீடுகள் அதிகளவில் வெளியேறி டாலர் மதிப்பு வலிமை பெற்றது.

இதனால் டாலர் அல்லாத நாணயங்களைக் கொண்ட நாடுகளின் நாணயம் மதிப்பு அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டது. இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் 77.57 ரூபாய் வரையில் சரிந்த நிலையில், பாகிஸ்தான் ரூபாயும் வரலாற்றுச் சரிவை பதிவு செய்துள்ளது.

இன்னும் 2 நாள் தான்.. புதிய அரசு அமையாவிட்டால் இலங்கையின் பொருளாதாரம் மோசமாகலாம்..!

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

இன்று வங்கிகளுக்கு இடையேயான வர்த்தகச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்ததுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் ஆட்சி மாறினாலும் மக்கள் இன்னும் பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகின்றனர்.

190.440 ரூபாய்

190.440 ரூபாய்

இந்நிலையில் அமெரிக்காவின் வட்டி உயர்வுக்குப் பின்பு பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஒருவாரமாகச் சரிந்து வரும் நிலையில் இன்று 99 பைசா சரிந்து தற்போது வங்கிகளுக்கு இடையேயான சந்தையில் ரூ.190.440 ஆக வர்த்தகமாகி வருகிறது. இது புதிய வரலாற்றுச் சரிவாக உள்ளது.

200 கூடத் தாண்டலாம்
 

200 கூடத் தாண்டலாம்

அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து நாணய சந்தையில் ஆதிக்கம் செலுத்தினால் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 200 கூடத் தாண்டலாம் என அன்னிய சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் மோசம் அடையும் வேளையில் கடன் சுமையும் அதிகரித்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆஃ பாகிஸ்தான்

ஸ்டேட் பாங்க் ஆஃ பாகிஸ்தான்

இதற்கிடையில், ஏப்ரல் 23 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், ஸ்டேட் பாங்க் ஆஃ பாகிஸ்தானின் (SBP) அந்நியச் செலாவணி கையிருப்பு 328 மில்லியன் டாலர் குறைந்து 10.558 பில்லியன் டாலராக உள்ளது என அந்நாட்டு மத்திய வங்கி வெளியிட்ட தரவு காட்டுகிறது.

பணவீக்கம்

பணவீக்கம்

பாகிஸ்தான் நாட்டின் பணவீக்க விகிதம் மார்ச் மாதத்தில் 12.7% ஆக இருந்து 2022 ஏப்ரல் மாதம் 13.4% ஆக அதிகரித்துள்ளது. இது ஜனவரி 2021 க்குப் பின்பு அதிகப்படியான பணவீக்க விகிதமாகும். இந்தப் பணவீக்க உயர்வுக்கு முக்கியமாகப் போக்குவரத்து விலைகளில் (மார்ச் மாதத்தில் 28.3% எதிராக 26.3%) ஏற்பட்ட உயர்வு தான்.

நுகர்வோர் விலை உயர்வு

நுகர்வோர் விலை உயர்வு

உணவு மற்றும் மது அல்லாத பானங்கள் (17.0%), அலங்காரங்கள் (14.7%). இதற்கிடையில், வீடுகள் மற்றும் பயன்பாடுகளின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன (7.1%). மறுபுறம், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களின் பணவீக்கம் சீராக இருந்தது (14.6%). மாதாந்திர அடிப்படையில், நுகர்வோர் விலைகள் மார்ச் மாதத்தில் 0.8% உயர்ந்ததைத் தொடர்ந்து ஐந்து மாதங்களில் அதிகபட்சமாக ஏப்ரல் மாதம் 1.6% அதிகரித்தன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Pakistani rupee plunges to all-time low 190 against US dollar today

Pakistani rupee plunges to all-time low 190 against US dollar today டாலர் ஆதிக்கம்.. பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு என்ன தெரியுமா..?!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.