வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தலைநகர் டில்லியில், ஐந்து சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டும் என, பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு மாநில பா.ஜ., தலைவராக இருக்கும் ஆதேஷ் குப்தா, என்.டி.எம்.சி., எனப்படும் புதுடில்லி நகராட்சி கவுன்சிலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: டில்லியில், முகலாய மன்னர்கள் பெயரில் சாலைகள் உள்ளன. இது, நாடு அடிமைப்பட்டு கிடந்ததை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளது. அதனால், இந்த சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டும்.
துக்ளக் சாலையை, குரு கோவிந்த் சிங் சாலை என்றும், அக்பர் சாலையை மஹாரானா பிரதாப் சாலை என்றும், அவுரங்கசீப் சாலையை அப்துல் கலாம் சாலை என்றும் மாற்ற வேண்டும். அதேபோல், ஹூமாயூன் சாலையை மகரிஷி வால்மிகி சாலை என்றும், ஷாஜகான் சாலையை ஜெனரல் பிபின் ராவத் சாலை என்றும், பாபர் சாலையை குதிராம் போஸ் சாலை என்றும் மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement