டெல்லியில் தெருக்களிலும் சாலைகளிலும் ஆக்கிரமித்துக் கட்டியுள்ள கட்டுமானங்களை இடித்து அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
தெற்கு டெல்லியில் சாகீன்பாக்கில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்குத் தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், பாதிக்கப்படுவோர் உயர் நீதிமன்றத்தை அணுகும்படி கூறிவிட்டது.
இந்நிலையில் துவாரகாவில் இன்று பொக்லைன்கள், புல்டோசர்கள் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.