தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை செய்யப் போவதாக முனிசி., யில் தீர்மானம் நிறைவேற்றினாங்க. கருத்தடைசெய்ய, ‘டெண்டர்’ இன்னும் விட்டதா தெரியல. ஆறு மாதத்துக்கு முன்பு இதுகுறித்து நகராட்சியில் விவாதம் நடந்து,பல லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கியதாக சொன்னாங்க.ஆனாலும், தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தியதாக தெரியல. ஆறு மாதத்தில் தெருநாய்கள் ரெட்டிப்பாகபெருகி இருக்கு. சாலைகளில், தெருக்களில் இதன் நடமாட்டத்தால் ஜனங்க அலறுறாங்க. எதுக்கும் ஆஸ்பிடல்களில் நாய்க்கடி இன்ஜெக் ஷன் மருந்தை அதிகமாக ஸ்டாக் வைத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகள், பெண்கள் தனியாக செல்ல முடியவில்லை.தெருநாய்கள் உற்பத்தியில் கோல்டு சிட்டிக்கு தான் முதலிடம்.வாரிசுக்கு ‘சீட்’ செலக் ஷன்!முல்பாகலில் புல்லு கட்டு சின்னத்தின் ‘மாஜி’ பி.எம்., ‘மாஜி’ சி.எம்.,இவர்களின் அரசியல் வாரிசான நடிகர் என குடும்ப கம்பெனி ஓனர்கள்எல்லோருமே ‘நீர்வள விழிப்புணர்வு யாத்திரை’ பேரில், அசெம்பிளி தேர்தலின் முன்னோட்ட பிரச்சாரத்துக்கு வந்தாங்க.’இது எங்கள் தொகுதி. மாற்றார் யாரும் முந்த முடியாது’ன்னு சவால் விட்டிருக்காங்க. மாவட்டத்தில் இருக்கிற ஆறு தொகுதிகளில், இவர்களுக்கு நான்கு மீது தான் நம்பிக்கையாம்.மற்ற கோளாறான தொகுதியிலும், பொன்னான சிட்டியிலும் அவங்களுக்கு அப்படியென்ன வெறுப்போ அல்லது வேறுவிதமாக உள் வேலை நடத்தி வர்றாங்களோ?கோளாறான தொகுதியில் ஏற்கனவே புல்லுக்கட்டுக்காரர் வசம் தான் அசெம்பிளி தொகுதி இருந்தது.
ஆனால் ஒத்துப் போகிற ஆளாக இல்லாமல், அவர் ஒதுங்கி போயிட்டாரு. அதனால், கோளாறான தொகுதியில் குடும்ப வாரிசுக்கு இத்தொகுதியை ரிசர்வ் செய்யலாமான்னு யோசிக்கிறாங்களாம். அந்த யூத் தலைவர் அடிக்கடி இத்தொகுதி பக்கம் வந்து போவதாக பேசிக்கிறாங்க. நம்பிக்கைக்குரிய எம்.எல்.சி., யிடம் அதன் பொறுப்பை ஒப்படைக்க போறாங்களாம்.புல்லுக்கட்டு துாக்குவாரா!கோல்டு சிட்டியில் செல்வாக்கு மிக்க வி.வி.ஐ.பி.,க்கு ஒருவேளை பூ கட்சியில், ‘சீட்’ கிடைக்காமல் போனா, அவரை புல்லுக்கட்டு துாக்க வைக்க போறதா ரகசிய தகவல் வெளியே வந்திருக்கு.
பூக்காரருக்கு கிரீன் சிக்னல் கிடைத்திருக்கிறதாம். அதன்படி நடந்துவிட்டால் இவரின்அசைக்க முடியா கிராம ஓட்டுகள் சிதறாது. முக்கோண போட்டி கியாரண்டி. நகரத்தில் மட்டுமே நான்கு முனை போட்டியை தவிர்க்க முடியாது. எப்படியும் கூட்டி கழித்து பார்த்தால், கோல்டு சிட்டி தொகுதியில் வாகை சூட்டிக்கொள்வது அவ்வளவு ஈஸியாக இருக்காது.நகரத்தை இருப்பிடமாக கொண்டவர்,இருமுறை தோல்வியை சந்தித்தவராக இருப்பதால், இம்முறை வெற்றிக்கான எல்லாவித, ‘பார்முலா’ வையும் பயன்படுத்த தயாராக இருக்கிறாராம். இப்பவும் தேர்தல் முடிவு ஏடாகூடமா மாறிட்டால், இனி சிட்டிக்காரங்க கனவிலும் அசெம்பிளி காரராக இருக்க நோ சான்ஸ் என்கிறாங்க.இனியாவது அக்கறை வருமா?தங்கமான நகரில் நீர் வளம் இருந்தும், அதை பயன்படுத்தாமல் இருக்குறாங்களே.
மழை நீரை நம்பி தான் எரகோள் அணை கட்டினாங்க. ஆனால் சுரந்து நிரம்பிய சுரங்க நீரை கொண்டு பெரிய அணையை ஏற்படுத்தினால் மாவட்டத்துக்கே பஞ்சமில்லாமல் தண்ணீர் தரலாம்னு, சுரங்கத் தொழில்நுட்ப நிபுணர்கள் சொல்லி இருக்காங்க.இந்த நீர்வளத்தை பெற கவனிக்க ஆளில்லையே. சுரங்க நீரால், நீர்மின் உற்பத்தி நிலையம் அமைத்து மின்சக்தி ஏற்படுத்தலாம்னு நிபுணர்கள் சொல்றாங்க. நதிநீர் வளமே இல்லை என்பதால், காவிரி வருமா, கிருஷ்ணா கிடைக்குமா, எரகோளாச்சும் தாகம் தீர்க்குமான்னு ஏங்க வெச்சிருக்காங்க.’யாத்திரை’ காரர்களாவது சுரங்க நீரை பற்றி அக்கறை காட்டினால் கோல்டு நகரத்தை வறட்சியில் இருந்து மீட்க முடியும்னு, ‘மாஜி’ தொழிலாளிகள் பேசுறாங்க.