பள்ளிக்கு 50 மீட்டர் அருகில் மதுக்கடை அமைக்க அனுமதிக்க கூடாது என்ற மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க, கோவை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை மாவட்டம், தென்னம்பாளையம் பகுதியில் செயல்படும் பள்ளியில் இருந்து, சுமார் 50 அடி தொலைவில் மதுக்கடை திறக்கப்படுவதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ் குமார் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அவரின் அந்த மனுவில், ‘தென்னம்பாளையம் பள்ளி வளாகத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்திலேயே தமிழக அரசின் டாஸ்மாக் மது கடை திறக்கப்பட உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இன்று இந்த மனுவை விசாரணையை செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.