தமிழில் அதிக சம்பளம் வாங்குவதில் யார் நம்பர் 1 ?
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு மூன்று நடிகர்கள் தான் மிக அதிக சம்பளம் வாங்குவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் மூவருமே 100 கோடி சம்பளத்தைக் கடந்துள்ளார்களாம்.
ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர்தான் அந்த மூவர். அவர்களில் ரஜினிகாந்த் அதிக பட்சமாக 120 கோடி சம்பளம் வாங்குகிறாராம். அவருக்கடுத்து விஜய் 110 கோடியும், அஜித் 100 கோடியும் சம்பளம் வாங்குவதாகச் சொல்கிறார்கள். மூவருக்குமே அடுத்து அவர்கள் நடிக்கும் படங்களின் சம்பளம் இதுதானாம். இதற்கு முன்னர் இதை விட சில பல கோடிகள் குறைவாக சம்பளம் வாங்கியவர்கள் புதிய படத்திற்காக சம்பளத்தை உயர்த்திவிட்டார்களாம்.
விஜய், அஜித்தை விடவும் ரஜினிகாந்த் அதிக சம்பளம் வாங்குவதுதான் ஆச்சரியம் என்கிறது கோலிவுட். கடந்த பல ஆண்டுகளாக வசூல் சக்கரவர்த்தியாக இருந்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடைய சூப்பர்ஸ்டார் பட்டத்திற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய், அஜித் இருவருமே ஆசைப்பட்டதாக பரபரப்பாக செய்திகள் வெளியாகின. அதன்பின் அந்த சர்ச்சை அப்படியே அமைதியாகிவிட்டது.
விஜய், 'இளைய தளபதி' என்பதிலிருந்து தன்னை 'தளபதி' ஆக பதவி உயர்வை செய்து கொண்டார். அஜித் தன்னை 'தல' என அழைக்க வேண்டாம், அஜித்குமார் அல்லது 'ஏகே' என அழைத்தால் போதும் என ரசிகர்களின் அன்பான பட்டத்தைத் துறந்தார்.
இவர்களுக்கு அடுத்தப்படியாக கமல்ஹாசன் – ரூ.50 கோடி, சிவகார்த்திகேயன் – ரூ.30 கோடி, சூர்யா – ரூ.25 கோடி, விஜய் சேதுபதி – ரூ.25, தனுஷ் – ரூ.25 கோடி, சிம்பு – ரூ.15 கோடி, விக்ரம் – ரூ.15 கோடி என சம்பளம் பெறுவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.