பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால்தான் இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்துள்ளது என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில் மாநில தலைவராக இம்முறை ஒரு பெண் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த கே எஸ் அழகிரி, செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விவரம் பினருமாறு :
செய்தியாளர் : தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவராக ஒரு பெண் வர வாய்ப்பு இருக்கிறதா?
கே எஸ் அழகிரி : காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில் மாநில தலைவராக இம்முறை ஒரு பெண் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.
செய்தியாளர் : இலங்கை விவகாரம் பற்றி?
கே எஸ் அழகிரி : சுய சார்பின்றி பிற நாடுகளை சார்ந்து இருந்ததே இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு காரணம். இதேபோல், பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால்தான், இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்துள்ளது.
இடது, வலதுசாரிகளின் பக்கம் நிற்காமல் ,இயல்பான கொள்கைகளைக் கொண்டு காங்கிரஸ் கட்சி பயணிக்கிறது.
இவ்வாறு அந்த செய்தியாளர் சந்திப்பில் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.