மனசாட்சி இல்லாமல் 150% வரை உயர்த்திய சொத்து வரியை, தற்போது ஆண்டுதோறும் உயர்த்துவதற்கு திமுக அரசு சட்டம் கொண்டு வந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று மாமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள டிவிட்டர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக சொத்து வரியை மனசாட்சி இல்லாமல் 150% வரை உயர்த்திய தி.மு.க அரசு, தற்போது ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்துவதற்கு சட்டம் கொண்டு வந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஸ்டாலின் அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றிருப்பதைக் கொண்டாடும் விதமாக இதுபோன்ற தண்டனைகளை பரிசாக மக்களுக்கு கொடுத்திருக்கிறார்களோ?
எஞ்சிய 4 ஆண்டுகளில் இன்னும் என்னென்ன தண்டனைகளை பரிசுகளாக வாக்களித்த மக்களுக்கு வாரி வழங்கப்போகிறார்களோ?! தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்”.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக சொத்து வரியை மனசாட்சி இல்லாமல் 150% வரை உயர்த்திய தி.மு.க அரசு, தற்போது ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்துவதற்கு சட்டம் கொண்டு வந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. (1/3) @CMOTamilnadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 11, 2022