தாஜ் மகால் கட்டப்பட்டிருக்கும் நிலம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தினருக்குச் சொந்தமானது என பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான தியா குமாரி தெரிவித்துள்ளார்.
ஆக்ராவில் தாஜ்மகால் கட்டப்பட்டுள்ள நிலம் தங்களுடையது என்றும், அதை ஷாஜகான் கையகப்படுத்தியதற்கான ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாஜ்மகாலில் பூட்டப்பட்டுள்ள 20 அறைகளைத் திறக்கக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதை ஆதரிக்கும் தியா குமாரி, அவற்றினுள் என்ன உள்ளது என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.