சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே திருமணமாகாத விரக்தியில் தந்தையை தாக்கி கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை கீழ்பாதியைச் சேர்ந்தவர் லுார்துசாமி, 75. இவரது மூத்த மகன் ஜான்சன், 35. இவர் கடந்த 7ம் தேதி மாலை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு லுார்துசாமியிடம் தகராறு செய்து, அவரை தாக்கினார்.படுகாயமடைந்த லுார்துசாமி சிதம்பரம் ராஜா முத்தையா மருத் துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின், மேல் சிகிச்சைக் காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டார். இது குறித்து லுார்துசாமியின் இளைய மகன் ஜான்பிரிட்டோ கொடுத்த புகாரின் பேரில் ஜான்சன் மீது சோழத்தரம் போலீசார், கொலை முயற்சி வழக்குப் பதிந்தனர்.
இந்நிலையில் லுார்துசாமி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, போலீசார் கொலை வழக்காகப் பதிவு செய்து, ஜான்சனை தேடி வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே திருமணமாகாத விரக்தியில் தந்தையை தாக்கி கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.