அவசர பணத் தேவை என்பது யாருக்கு வேண்டும் என்றாலும் வரலாம். எனவே ஒவ்வொருவரும் குறைந்தது தங்களது 6 மாத சம்பளத்துக்கு இணையான தொகையைச் சேமிப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இதை பலரும் செய்வதில்லை. இப்படி சேமிப்பு இல்லாத போது, அவசரக் காலத்தில் மருத்துவம் அல்லது பிற செலவுகளுக்குப் பணம் வேண்டும் என்றால் கடன் பெறுவதை தவிர வேறுவழியில்லை. எனவே அவசரக் காலத்தில் வேகமாகக் கடன் அளிக்கும் திட்டங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
வாவ்.. பக்காவா காய் நகர்த்தும் கேபிள் நிறுவனம்.. ஷேர்கானின் அட்டகாசமான பரிந்துரை!
பிக்சட் டெபாசிட் எதிரான கடன்
பிக்சட் டெபாசிட்டில் சேமித்து வந்தால், அதில் உள்ள தொகையில் 90 முதல் 95 சதவீத தொகையைக் கடனாகப் பெற முடியும். வங்கிகள் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் போது பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்துடன் 2 சதவீதம் கூடுதலாக வட்டியை வசூலிக்கின்றன.
தங்க நகைக் கடன்
தனிநபர் கடன் திட்டங்களுடன் ஒப்பிடும் போது வீட்டில் தங்கம் இருந்தால், சில மணி நேரங்களில் வங்கிகளில் கடன் பெற முடியும். தனிநபர் கடனை விட வட்டி விகிதமும் குறைவு. எனவே தான் இந்தியாவின் தென் மாநிலங்களில் தங்கம் வாங்குவதை ஒரு சேமிப்பாக பலர் கருதுகின்றனர்.
பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டு எதிரான கடன் திட்டங்கள்
பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வந்தால், அதில் உள்ள தொகையில் 50 சதவீதம் வரை கடனாக சில நிறுவனங்கள் அளிக்கின்றன. தனிநபர் கடனுக்கு இணையான வட்டி விகிதம் வசூலிக்கப்படும்.
முன் அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன்கள்
அவசர காலத்தில் அதிக கடன் பெறும் ஒரு திட்டமாக முன் அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன் திட்டம் உள்ளது. சம்பள வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கான கடன் திட்டமாக இது உள்ளது.
கிரெடிட் கார்டு எதிரான கடன் திட்டங்கள்
சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள், சரியாக கிரெடிட் கார்டு கடனை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இன்ஸ்டண்ட் கடனை வழங்குகின்றன. ஆனால் இந்த திட்டத்துக்குத் தனிநபர் கடன் திட்டத்தை விட கூடுதல் வட்டி வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டு வரம்பிற்குள் கடன் பெறும் போது கூடுதலாக ஜிஎஸ்டி 18 சதவீதமும் செலுத்த வேண்டி வரும்.
இன்சூரன்ஸ் திட்டங்கள் எதிரான கடன்
எண்டொவ்மெண்ட் இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுத்து இருந்தால், 3 அல்லது 5 வருடங்கள் தொடர்ந்து ப்ரீமியம் தொகையைச் செலுத்திய பிறகு, அதில் உள்ள தொகையில் 80 முதல் 90 சதவீதம் வரை கடனாகப் பெறலாம். தங்க நகைக் கடனுக்கு நிகரான வட்டி விகிதம் வசூலிக்கப்படும்.
Fastest ways to borrow money
Fastest ways to borrow money | தி்டீர் பணத் தேவையா? வேகமாகக் கடன் பெற எளிய வழிகள்!