டெல்லி: தேச துரோக வழக்கு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்துள்ளோம் என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தற்போது நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு மதிப்பளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.