தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தும்? – ஒபிஎஸ்

தேர்தல் அறிக்கையில் இருந்து திமுக நழுவி கொண்டுள்ளது – அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத திமுக புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த போகிறது என ஓ.பன்னீர்செல்வம் கேள்வியெழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவை மானியக்கோரிக்கை விவாத நிகழ்வுகளில் கலந்து கொண்ட நிலையில், சட்டப்பேரவை நிறைவடைந்ததை அடுத்து தேனி மாவட்டத்திற்குச் செல்ல சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார்.
image
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம்… பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் என நிதியமைச்சர் பேசியது குறித்த கேள்விக்கு,
தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்த நிலையில், அதிலிருந்து திமுக நழுவிக் கொண்டுள்ளனர். பழைய ஒய்வூதிய திட்டம் குறித்து திமுகவிடம் தான் கருத்து கேட்க வேண்டும்.
மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை திமுக நடைமுறைப்படுத்துமா என்ற கேள்விக்கு…,
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக அரசு புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தப்போகிறது என கேள்வியெழுப்பினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.