இலங்கையில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் களமிறக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்குமாறு ராணுவ தளபதி சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டையும், பொதுச் சொத்துக்களையும் பாதுகாக்கும் முயற்சியில் முப்படையினரும் ஈடுபட்டுள்ளதாகவும், ராணுவத்தின் முயற்சிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்கி வீடுகளிலேயே இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, பாதுகாப்பு காரணங்களுக்காகவே மகிந்த ராஜபக்சே திரிகோணமலை கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இயல்பு நிலை திரும்பியதும் மகிந்த ராஜபக்சே அவர் விரும்பும் இடத்திற்கு மாற்றப்படுவார் எனவும் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு திரிகோணமலை கடற்படை தளத்தில் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் தங்க வைக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.