வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, பாதுகாப்பு காரணங்களுக்காகவே, கடற்படை தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக, அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அந்நாட்டு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட ஆளுங்கட்சியினருக்கு சொந்தமான வீடுகள், வர்த்தக நிறுவனங்ளை மக்கள் தீவைத்து எரிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன. நாளுக்கு நாள் வன்முறை அதிகரித்து வருவதால், மகிந்த மற்றும் அவரது குடும்பத்தினர், திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் பதுங்கி உள்ளனர். அங்கிருந்து வெளிநாட்டிற்கு தப்பி செல்ல மகிந்த ராஜபக்சே முயற்சி செய்வதாக வெளியான தகவலை அவரது தரப்பு மறுத்துள்ளது.
இந்நிலையில், இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சக செயலர் கமல் குணரத்னே கூறுகையில், பாதுகாப்பு காரணங்களுக்காகவே மகிந்த ராஜபக்சே கடற்படை தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது அதிகாரப்பூர்வ இல்லம் தாக்கப்பட்டதையடுத்து கடற்படை தளத்திற்கு அழைத்து சென்றோம். நிலைமை சீரானதும், அவர் விரும்பும் இல்லத்திற்கு அழைத்து செல்லப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement