பொதுவாக சேமிப்புகள் என்றாலே நம்மவர்களுக்கு நினைவுக்கு வருவது வங்கி பிக்சட் டெபாசிட்கள் தான். இதில் சந்தை அபாயம் இல்லை. நிரந்தர வருமானம் கிடைக்கும். ரிஸ்க் என்பது இல்லை. குறிப்பாக மூத்த குடிமக்கள் என்றாலே வேறு ஆப்சனே வேண்டாம் என்ற நிலையே இருந்து வந்தது.
ஆனால் இன்று அப்படியில்லை. அதனையும் தாண்டி லாபம் கொடுக்கக் கூடிய லாபகரமான திட்டங்கள் பல உள்ளன. ஏன் வங்கி பிக்சட் டெபாசிட்களிலேயே அதிக லாபம் கொடுக்கக் கூடிய, மாற்று டெபாசிட் திட்டங்களும் உள்ளன.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது எஸ்பிஐ பிக்சட் டெபாசிட் Vs அஞ்சலக பிக்சட் டெபாசிட். இதில் எது சிறந்தது? எது லாபகரமானது? வாருங்கள் பார்க்கலாம்.
இலங்கை முதல் விக்கெட் தான்.. லிஸ்ட்டில் பல நாடுகள் உள்ளது.. எச்சரிக்கும் ஐநா, உலக வங்கி..!
அஞ்சலகம் Vs வங்கிகள்
அஞ்சலக டெபாசிட் திட்டங்கள், வங்கி டெபாசிட் திட்டங்களை போன்றே நல்ல லாபம் கொடுக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. வங்கிகளை போலவே அஞ்சலகத்திலும் பல்வேறு திட்டங்கள் உள்ளன. அதிலும் வட்டி விகிதம் கால அவகாசம் அதிகரிக்க அதிகரிக்க கூடிக் கொண்டே செல்கின்றது. வங்கிகளை விட அஞ்சலகத்தில் வட்டி அதிகம்.
எஸ்பிஐ (ரூ.2 கோடி ரூபாய்க்குள் டெபாசிட்)
பொதுமக்களுக்கான டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் 10 மே நிலவரப்படி
7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் – 3%
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் – 3.50%
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில் – 3.50%
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் – 3.75%
1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் – 4%
2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் – 4.25%
3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் – 4.50%
5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்குள் – 4.50%
எஸ்பிஐ மூத்த குடிமக்கள் (ரூ.2 கோடி ரூபாய்க்குள் டெபாசிட்)
மூத்த குடிமக்களுக்கான டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் 10 மே நிலவரப்படி
7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் – 3.50%
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் – 4%
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில் – 4%
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் – 4.25%
1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் – 4.50%
2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் – 4.75%
3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் – 5%
5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்குள் – 5%
அஞ்சலக பிக்சட் டெபாசிட்
அஞ்சலக பிக்சட் டெபாசிட் திட்டங்களில் வட்டி விகிதம்
1 வருடம் – 5.5%
2 வருடம் – 5.5%
3 வருடம் – 5.5%
5 வருடம் – 6.7%
மேற்கண்ட இந்த இரண்டு கணக்குகளிலுமே அதிகபட்ச முதலீடு என்பது நிர்ணயிக்கப்படவில்லை. எனினும் அஞ்சலகத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ளலாம். வட்டி விகிதம் வருடத்திற்கு ஒரு முறை பெற்றுக் கொள்லலாம். முன் கூட்டியே முடித்துக் கொள்ள முடியும். எனினும் தொடங்கி ஆறு மாதங்களுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றது. நாமினி வசதியும் உண்டு.
எது சிறந்தது?
பொதுவாக வங்கி டெபாசிட்டினை விட அஞ்சலகத்தில் வட்டி அதிகம். ஆனால் வங்கிகளில் இருப்பதை போல குறுகிய கால டெபாசிட் திட்டங்கள் அஞ்சலகத்தில் இல்லை. எனினும் நீண்டகால நோக்கில் செய்ய நினைப்பவர்களுக்கு வட்டி அதிகம். எஸ்பிஐயில் அதிகபட்சமாக 5 – 10 ஆண்டுகளுக்கே 4.50% தான் அதிகபட்சமாக கிடைக்கிறது. இதே அஞ்சலகத்தில் அதிகபட்சமாக 5 ஆண்டு திட்டத்தில் 6.7% வட்டி வழங்கப்படுகின்றது. முன் கூட்டியே வேண்டுமானாலும் 6மாதம் கழித்து முடித்துக் கொள்ளலாம்.
SBI FD Vs Post office FD: which one is best for investment?
SBI FD Vs Post office FD: which one is best for investment?/பிக்சட் டெபாசிட் செய்ய திட்டமா.. வங்கி வட்டியை விட அதிகம்.. எங்கு எவ்வளவு கிடைக்கும்?