புதிய வீடு வாங்கிய பிக்பாஸ் பிரபலம் : சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு

Tamil Biggboss Celebrity Anitha Sambath New Home : தற்போதை காலகட்டத்தில் திரைத்துறையை விட சின்னத்திரை நடிகர் நடிககைளுக்குகே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் தொலைக்காட்சிகளும் அவ்வப்போது புதிய நிகழ்ச்சிகளை களமிறக்கி வருகின்றன.

அந்த வகையில் விஜய் டிவியில் ஆண்டுதோறும் நடத்தப்படும் முக்கிய ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். ஹிந்தியின் ஹிட்டான இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பலர் பிரபலமாகியள்ளனர். நடிகைகள் பலரும் படவாய்ப்பு பெற்றுள்ளனர்.

அந்த வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் பங்கேற்றவர் அனிதா சம்பத். சன்டிவியின் நியூஸ் ரீடராக இருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றுவரை சென்றார். மேலும் ஒரு சில திரைப்படங்களிலும், நடித்துள்ள இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அனிதா சம்பத் தற்போது புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், சொந்த வீடு வாங்குவது தனது கணவாக இருந்ததாகவும் தற்போது அந்த கனவு நிறைவேறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் புதிய வீட்டின் முன் தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

 ‘“வீடு எப்போதுமே எங்க ரெண்டு பேருக்கும் மிக பெரிய கனவு.வாடகை வீட்டுலயே நல்ல வீடு கிடைக்காதா..பெட்ரூம் வச்ச வீட்டுக்கு போக மாட்டோமானு ஏங்குன காலம் எல்லாம் இருக்கு..

ஓட்டு வீடுல பிறந்து வளர்ந்த பிரபாக்கும் அதே தான்.இன்னக்கி எங்களுக்கு பிடிச்ச மாதிரி எங்களுக்காக ஒரு வீடு.

நிறைய வலிகளும் நிறைய உழைப்பும் நிறைய மெனக்கெடல்களும் கடந்து அன்னையர் தினம் அன்று எங்கள் அன்னையர்களுக்காக அவர்களின் சொந்த வீட்டு கனவை நினைவாக்கி விட்டோம் “நம்ம எல்லார் வாழ்க்கையும் ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும்”. இப்ப அதை இன்னும் வலிமையா நம்புறேன்.

இதை படிக்கிற நீங்க எல்லாருமே சீக்கிரம் வீடு வாங்குவீங்க.எங்க சார்பா அதற்கான வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.