கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டில் டைல்ஸ் போடும் வேலைக்கு வந்த வடமாநில வாலிபர் கொலை செய்து வீட்டிற்குள் புதைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பீகாரைச் சேர்ந்த பவன்குமார் என்ற அந்த இளைஞர், பு.மாம்பாக்கத்தில் ரமேஷ் என்பவர் கட்டி வரும் புதிய வீட்டில் டைல்ஸ் பதிப்பதற்காகச் சென்றுள்ளார்.கடந்த 6ஆம் பவன்குமார் உடன் வந்த வந்த ஒரு இளைஞர் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்று விட்ட நிலையில் மற்றொரு வாலிபர் தலைமறைவாகி விட்டார்.
இதனிடையே பவன்குமாரின் உறவினர் பவன்குமாரை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் அணைக்கப் பட்டு இருந்தது. அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உறவினர் பூ.மாம்பாக்கம் கிராமத்திற்கு நேரில் வந்து உள்ளார். அங்கு தேடிப் பார்த்தபோது பவன்குமார் இல்லாத நிலையில் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த சோனாசைனி வீட்டின் உள்புறம் தேடிப்பார்த்து உள்ளபோது வீட்டின் முகப்பு பகுதியில் பவன்குமாரின் ஆடைகள் ரத்தக் கறையுடன் கடந்ததை பார்த்துள்ளார். அந்த இடத்தை போலீசார் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டிப் பார்த்ததில் காயங்களுடன் பவன்குமாரின் உடல் கிடந்துள்ளது. பவன்குமாருடன் வேலைக்கு வந்து தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.