பெண்களுக்கான கருக்கலைப்புக்கு கட்டுப்பாடு: கருவை கலைத்த பெண்ணுக்கு 30 ஆண்டு சிறைதண்டனை

சான் சால்வடார்: கருக்கலைப்பு செய்துக் கொண்ட பெண்ணுக்கு எல் சால்வடார் நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. 

மகப்பேறு அவசரநிலை காரணமாக அந்தப் பெண் கருக்கலைப்பு செய்ததாக அந்தப் பெண்ணைப் பாதுகாக்க உதவிய ஒரு அரசு சாரா அமைப்பான சிட்டிசன் குரூப் ஃபார் தி கிரிமினலைசேஷன் ஆஃப் அபார்ஷன் (Citizen Group for the Decriminalization of Abortion), செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை (2022, மே 9) தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணுக்கு அந்த அமைப்பு ‘எஸ்மி’ என்று பெயரிட்டது. “நீதிபதி பாரபட்சமாக நடந்து கொண்டார். அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் வாதத்திற்கு நீதிபதிஅதிக முக்கியத்துவம் கொடுத்தார், இது பழமைவாத சிந்தனை நிறைந்தது, மிகப் பெரிய தவறான முன்னுதாரணமாகிவிடும்” என்று அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு, நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | தாயின் ஆரோக்கியமே குடும்பத்தின் நிம்மதி

அமெரிக்காவில் கருக்கலைப்பு பற்றிய விவாதம்
மறுபுறம், ஒரு அறிக்கையின்படி, அமெரிக்க உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு தொடர்பான பெண்களின் உரிமையை ரத்து செய்யப் போவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பெரும்பான்மை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சட்ட வரைவு கசிந்ததில் இந்தத் தகவல் தெரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் உண்மையாக இருந்து, அது நடைமுறைப்படுத்தப்பட்டால், 50 ஆண்டுகளாக அரசியல் சாசனத்தில் இருந்து வரும் பெண்களுக்கான கருக்கலைப்பு சுதந்திரம் முடிவுக்கு வரலாம்.

இது தனிமனித சுதந்திரம் என்ற கொள்கைக்கு எதிரானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால், அமெரிக்காவில் கருக்கலைப்பு குறித்த விவாதம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

பெண்களுக்கு நெருக்கடி 
அமெரிக்காவில் இனப்பெருக்க உரிமைகள் தொடர்பாக பெண்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். கருக்கலைப்பு தொடர்பாக பல மாகாணங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

ஆறு மாதங்களுக்குப் பிறகு கருக்கலைப்புக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. பல பெண்களுக்கு தாங்கள் கர்ப்பமாக இருப்பது கூட தெரியாத காலமாக இருப்பதால், இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.

கர்ப்பம் தரிக்காமல் தடுப்பதற்கான மாத்திரைகள் பயன்படுத்துவது ஒருபுறம் என்றால், கருவை கலைப்பதற்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளை உட்கொள்வது தவறு என்று சட்டம் இயற்றினால் என்னவாகும் என்ற கவலைகளுக்கு இடையில், அமெரிக்காவில் கருக்கலைப்புகளின் அதிகரித்து வரும் எண்ணிக்கை கவலையளிப்பதாக இருக்கிறது.

மேலும் படிக்க | ரகசிய கருக்கலைப்பு: பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! தப்பியோடிய நபர்

பெண்கள் வீட்டிலேயே எடுத்துக்கொள்ளக்கூடிய Roe v. Wade போன்ற கருத்தடை மாத்திரைகளை ரத்து செய்தால் அது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்றும், பெண்களுக்கானகருக்கலைப்பு சுதந்திரம் போய்விடும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது இதுபோன்ற மருந்துகள், அமெரிக்காவில் கருக்கலைப்பு விஷயத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும், குறிப்பாக கருக்கலைப்பு கிளினிக்குகளுக்கான அணுகலை இழக்கும் பெண்களிடையே மாத்திரைகளே மிகவும் பிரபலமாக இருக்கிறது.

இந்த நிலையில் கருவை கலைத்த பெண் ஒருவருக்கும் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது அமெரிக்கா முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த போக்கு தொடர்ந்தால், பெண்கள், 50 ஆண்டுகள் பின்தங்கிவிடுவார்கள் என்று நம்பப்படுகிறது.

இந்த மாத்திரைகள் கர்ப்பம் தொடர்வதற்குத் தேவையான புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோனைத் தடுத்து, கருப்பையை சுருக்குகிறது. இது பயனுள்ளதா, பாதுகாப்பானதா? என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் தற்போது அமெரிக்கா முழுவதும் கருக்கலைப்பு தொடர்பான விவாதங்கள் வலுத்துள்ளன. 

மேலும் படிக்க | சாதி பெயரை கூறி அடித்து துன்புறுத்தல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.