பேரறிவாளன் அடுத்தவாரம் விடுதலை செய்யப்படலாம்? வெளியான பரபரப்பு தகவல்.!

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், தன்னை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மத்திய அரசு தனது வாதத்தில், “பேராறிவாளனின் வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பின் கீழ் வருகிறது. மாநில அரசுகள் தங்களது அதிகார வரம்பிற்குள் வரும் விசாரணை அமைப்புகளின் வழக்குகளில் மட்டுமே முடிவெடுக்கலாம். 

எனவே, மாநில அரசு முடிவெடுக்க முடியாது. சட்டப்பிரிவுகள் பொதுவாக இருந்தாலும், எந்த விசாரணை அமைப்பு என்பதை பொறுத்தே யாருக்கு அதிகாரம் என்பது அமையும்” என்று மத்திய அரசு வாதிட்டது.

இதனையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள், 

“இந்திய குற்றவியல் சட்டத்தின் 432, மற்றும் 161 ஆகிய பிரிவுகளுக்கிடையே என்ன வேறுபாடுகள் உள்ளன? 
3 ஆண்டுகளாக பேரறிவாளன் வழக்கில், ஆளுநர் முடிவெடுக்கவில்லை. 
ஆளுநர் எந்த விதிகளின் அடிப்படையில் கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்?  
அமைச்சரவை முடிவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 
75 ஆண்டுகளாக இந்திய குற்றவியல் சட்ட வழக்குகளில் ஆளுநர்களின் மன்னிப்புகள் அனைத்தும் அரசமைப்புக்கு முரணானதா? 
ஆளுநருக்காக மாநில அரசுதான் வாதிடவேண்டும், 
அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது” என்று சரமாரியாக கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினார்கள்.

அதனை தொடர்ந்து தமிழக அரசு தரப்பில், 

“ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தில் குடியரசுத் தலைவரை தலையிட வைப்பது ஏன்? 
அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. 
மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள முதன்மை அதிகாரம் இந்த விவகாரத்தில் பொருந்தாது. 
சிஆர்பிசி சட்டம் மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரத்தை வழங்கவில்லை. 
ராஜீவ் காந்தி படுகொலை தமிழகத்தில் நடைபெற்றதால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தான் முடிவெடுக்க முடியும்.
கருணை மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது என குற்றவியல் நடைமுறை சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை” என்று தமிழக அரசுய தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, பேரறிவாளன் அடுத்தவாரம் விடுதலை செய்யப்படலாம் என்றும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக அமைய வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.