பேரறிவாளன் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பரபரப்பான வாதம் – தீர்ப்பு ஒத்திவைப்பு…

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளளை விடுதலை செய்யக்கோரும் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்து.

உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்பாக இன்று பரபரப்பு வாதங்கள் நடைபெற்றது. ஆளுநரின் அதிகாரம், மாநில அரசின் அதிகாரம் மற்றும் மத்தியஅரசின் உரிமை குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. இதையடுத்து,  பேரறிவாளன் விடுதலை தொடர் பான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம்.

முன்னதாக இந்த வழக்கின் விசாரணையின்போது, ஆளுநர் முடிவெடுக்கும் விவகாரம் மாநில அரசின் அதிகாரத்துக்குள்பட்டே வருவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், வழக்கின் இன்றைய  விசாரணையின்போது, அமைச்சரவை முடிவை, குடியரசு தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா? கடந்த முறை 2 முடிவுகளை தேர்வு செய்ய கூறினோம், அதுதொடர்பாக ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டதா? என்பது தொடர்பாக மத்திய அரசிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள்  கேள்விகள் எழுப்பினர்.

பேரறிவாளன் விடுவிக்கக்கோரிய வழக்கு தொடர்பான விசாரணையின்போது, மத்திய அரசின் கூற்றுபடி கிரிமினல் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை என கூறுகிறீர்களா? என்றும் ஆளுநர் 2- 3 ஆண்டுகளாக முடிவும் எடுக்க வில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து,  ஆளுநர் முடிவு தொடர்பான ஆவணத்தின் நகலை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்தது. தொடர்ந்து வாதாடிய மத்தியஅரசின் வழக்கறிஞர், , மாநில அரசின் முடிவு அரசியலைப்பு சட்டத்திற்கு எதிராக இருக்கும் போது ஆளுநர் குடியரசுத்தலைவரிடம் முறையிடலாம். இந்த விவகாரத்தில் விடுதலை தொடர்பான அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என  கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கூறுகையில், இவ்வழக்கில் ஆளுநருக்காக மத்திய அரசு வாதிடுவது ஏன்? எந்த விதியின் கீழ் மாநில அரசுக்காக, மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகிறீர்கள்?, ஆளுநருக்காக மாநில அரசுதான் வாதிட வேண்டும், மத்திய அரசு இல்லை. ஆளுநருக்கு அதிகாரம் இருந்தும் 3 ஆண்டுகள் முடிவெடுக்காமல் இருந்தது ஏன்? எந்த விதியின் கீழ் குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் அனுப்பினார் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

மேலும், பேரறிவாளன் விடுதலை வழக்கில் நீதிமன்ற்ததின் நேரத்தை மத்திய அரசு வீணடிப்பதாக தெரிகிறது எனவும்,  கடந்த முறை வழங்கப்பட்ட இரண்டு வாய்ப்புகள் தொடர்பாக மத்திய அரசின் முடிவு என்ன? கிரிமினல் வழக்குகளில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என மத்திய அரசு கூறுவது போல் இருக்கிறது.

ஆளுநர் முடிவு மாநில அரசின் முடிவுக்குள் வருகிறது. அமைச்சரவை முடிவை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்பதை தெளிவுபடுத்துங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக மேலும் சில வாதங்களை முன்வைக்க விரும்புவதாக மத்திய அரசின் வழக்கறிஞர் கூறினார். அதைத்தொடர்ந்து பேசியவர்,  மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கும் வழக்குகளில் விடுதலை செய்வது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது. அதாவது, இந்திய குற்றவியல் சட்ட வழக்குகளில் குடியரசுத் தலைவருக்கு தனி அதிகாரம் உள்ளதா என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலாக, பொதுவான சட்டப்பிரிவுகள் இருந்தாலும் எந்த விசாரணை அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளது என்பதை பொறுத்தே அதிகாரம் அமையும் என்று மத்திய அரசு வாதிட்டது.

அப்போது, 75 ஆண்டுகளாக இந்திய குற்றவியல் சட்ட வழக்குகளில் ஆளுநரின் மன்னிப்புகள் அனைத்தும் அரசியலமைப்புக்கு எதிரானதா? முரணானதா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் நாங்கள் முடிவெடுக்க முடிவெடுத்த போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளோம்  அப்போது கூறுகிறிர்களே என் கேள்வி எழுப்பியது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனைகளுக்கான கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத்தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என வாதிட்டது.

இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள், அப்படியானால், 70 ஆண்டுகளாக ஆளுநர்கள் அளித்த தண்டனை குறைப்பு உள்ளிட்டவை அரசியல் அமைப்புக்கு விரோதமான   என கேள்வி எழுப்பியதுடன்,  ஆளுநர் முடிவெடுக்காமல் பல ஆண்டுகள் காலம் தாழ்த்தியது தொடர்பாக என்ன கூற விரும்புகிறீர்கள்? என்று வினவினர்.

பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கேள்விகளும், மத்திய அரசின் வாதமும் வேறு வேறாக உள்ளது. நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு தெளிவாக பதிலளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டனர்.

இந்த விவகாரத்தில் தமிழக  அரசு தலையிட அதிகாரம் இருக்கிறதா என்பதே பிரதான கேள்வியாக உள்ளது என்று மத்திய அரசும், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று மத்திய அரசு தலையிட்ட பின்னரே குழப்பம் தொடங்கியது என்று மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். யாருக்கு அதிகாரம் உள்ளது? என மத்திய அரசுதான் உச்ச நீதிமன்றத்தை நாடியது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில், மத்திய அரசிடம் சரியான தெளிவு இல்லை என்றும் கருணை விவகாரத்தில் மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் தானே.  மாநில அமைச்சரவை முடிவை ஏற்றுக்கொள்லாமல் ஆளுநர் அரசியல் சாசன பிழையை செய்திருக்கிறார் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் காரசாரமான  அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.