புதுடெல்லி: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, தனது பதவியை திங்கட்கிழமையன்று (2022, மே 9) ராஜினாமா செய்த ஒரு நாள் கழித்து, அவர் தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள இலங்கையில் உள்ள இந்திய ஹை கமிஷன் செவ்வாயன்று (மே 10, 2022) சக்திவாய்ந்த மஹிந்த ராஜபக்ச குடும்பத்தின் தேசபக்தர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்ற உள்ளூர் சமூக ஊடக ஊகத்தை “போலி மற்றும் அப்பட்டமான பொய்” என்று மறுத்துள்ளது.
“இலங்கையின் சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக ஊடகங்களிலும் சமூக ஊடகங்களும் வதந்திகள் பரவுவதை இந்திய ஹை-கமிஷன் கவனித்துள்ளது. இவை போலியான மற்றும் முற்றிலும் உண்மைக்கு முரணான செய்திகள். இவற்றில் உண்மை எடெஹுவும் கிடையாது. இந்திய ஹை கமிஷன் இந்த செய்திகளை மறுக்கிறது” என்று இலங்கையில் உள்ள இந்திய ஹை-கமிஷன் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
High Commission has recently noticed rumours circulating in sections of media & social media that certain political persons and their families have fled to India.
These are fake and blatantly false reports,devoid of any truth or substance.High Commission strongly denies them.— India in Sri Lanka (@IndiainSL) May 10, 2022
இதுவரை இலங்கை வரலாறு காணத அளவு, பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் இலங்கை பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமரின் ஆதரவாளர்கள் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியபோது, ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கினார்கள். அது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், மஹிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
Effective immediately I have tendered my resignation as Prime Minister to the President.
අගමැති ධූරයෙන් ඉල්ලා අස්වීමේ ලිපිය ජනාධිපතිතුමා වෙත යොමු කළෙමි.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) May 9, 2022
மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்ததில் இருந்து அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலையில் இந்தியாவுக்கு சென்றுவிட்டதாகவும் வதந்திகள் பரவின.
முன்னதாக பதவியை ராஜினாம செய்த பிரதமர் ராஜபக்ச, தனது அலுவலகம் மற்றும் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வெளியேறினார்.
கிழக்கு துறைமுக மாவட்டமான திருகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் அவர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், செவ்வாயன்று இலங்கையின் உயர்மட்ட சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரியும் சமூக ஊடக ஊகங்களில் வெளியான ஊகங்களை நிராகரித்ததுடன், “சட்டவிரோதமான போக்குவரத்து மற்றும் இலங்கையிலிருந்து எந்தவொரு நபரையும் அல்லது நபர்களையும் அகற்றுவதில்” ஈடுபடவில்லை என்று உறுதிப்படுத்தினார்.
மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள்
மக்கள் போராட்டம்
கடந்த 3 மாதங்களாக இலங்கையில் அரசை அகற்றக்கோரி போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர். முன்னாள் பிரதமர் ராஜபக்சே அரசு செய்த ஊழல்களுக்கு எல்லையே இல்லை என போராட்டக்காரர்கள் கொந்தளித்தனர்.
இலங்கையில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பட்டினிச் சாவுக்கு ராஜபக்சே சகோதரர்களின் தவறான கொள்கைகளே காரணம் என்றும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். தற்போது இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
ஆனால் போராட்டக்காரர்கள் போராட்டங்களைத் தொடர்வதில் உறுதியாக உள்ளனர். பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்த நிலையில், அவரது சகோதரரும், இலங்கை அதிபருமான கோத்தபய ராஜபக்சவும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் தொடர்கிறது.
மேலும் படிக்க | இலங்கை நெருக்கடி: போராட்டக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பித்த அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR