பா.ம.க. உறுப்பினர்களின் சட்டப்பேரவை செயல்பாடுகள், மக்கள் நலனில் பாமக கொண்டுள்ள அக்கறைக்கு சாட்சி என்று, பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பெருமிதம் கொண்டுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிக வினாக்களை எழுப்பி முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களில் ஜி.கே.மணி (8,312 வினாக்கள், இரண்டாமிடம்), இரா. அருள் (5,036, நான்காமிடம்) ச.சிவக்குமார் (2,937, ஐந்தாமிடம்) ஆகிய மூவர் பா.ம.க.வினர். அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள்!
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒட்டு மொத்தமாக வரப்பெற்ற 27,713 வினாக்களில் பாமகவின் 3 உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்கள் மட்டும் 16,285. மொத்த வினாக்களில் இது 59% ஆகும். கட்சி அடிப்படையில் பார்த்தால் அதிக வினாக்களை எழுப்பிய கட்சி பா.ம.க. தான்!
முதல் 6 இடங்களில் 3 பாமக எம்எல்ஏ.,க்கள்., மொத்தம் 16285 கேள்விகள் கேட்டு அசத்தல்.!#PMK #TNAssembly #MLA https://t.co/2gDszj2eAU
— Seithi Punal (@seithipunal) May 10, 2022
சட்டப்பேரவையில் அதிக எண்ணிக்கையில் கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வந்தவர் ஜி.கே. மணி தான். அவையில் முழு நேரம் இருந்தவரும் அவர் தான். மக்கள் நலனில் பா.ம.க. கொண்டுள்ள அக்கறைக்கு சட்டப்பேரவை செயல்பாடுகளே சாட்சி”
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1. தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிக வினாக்களை எழுப்பி முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களில் ஜி.கே.மணி (8,312 வினாக்கள், இரண்டாமிடம்), இரா. அருள் (5,036, நான்காமிடம்) ச.சிவக்குமார் (2,937, ஐந்தாமிடம்) ஆகிய மூவர் பா.ம.க.வினர். அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள்!#TNAssembly
— Dr S RAMADOSS (@drramadoss) May 11, 2022