இலக்கியத்துக்கான விருதை முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அறிவித்திருப்பதை எதிர்த்துப் புகழ்பெற்ற எழுத்தாளர் ரத்னா ரசீத் பானர்ஜி தனது விருதைத் திருப்பி அளித்துள்ளார்.
இலக்கியத் துறையில் சிறப்பான பங்களிப்பு ஆற்றியவர்களுக்கு மேற்கு வங்கத்தின் வங்க அகாடமி விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருது முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதற்குச் சிறந்த கல்வியாளரும் எழுத்தாளருமான ரத்னா ரசீத் பானர்ஜி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
மம்தா பற்றிய அகாடமியின் புகழுரை உண்மைக்குப் புறம்பானது என்றும், மம்தாவுக்கு விருது அறிவித்திருப்பது தங்களை அவமதிப்பதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல சாகித்ய அகாடமியில் வங்க மொழி ஆலோசனைக் குழு உறுப்பினர் அனாதிரஞ்சன் பிஸ்வாசும் பதவி விலகியுள்ளார்.