வடமாநில இளைஞர் கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் தனது சொந்தமாக ஒரு வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் அந்த வீட்டு வேலை செய்வதற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் வந்துள்ளனர்.
அவர்கள் தன் வீட்டின் மாடியில் தங்கி வேலை செய்து வந்த நிலையில் அந்த மூன்று பேரில் ஒருவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அவருக்கு புறப்பட்டு சென்ற நிலையில் மீதமிருந்த இருவர் மாயமானார்கள். இதனையடுத்து ரமேஷ் கட்டிவரும் வீட்டின் அருகே மண்ணில் இரத்தம் கலந்து உறைந்து கிடந்தது.
அதனை கண்ட அந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர் விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது மாயமான 2 வடமாநில இளைஞர்களில் ஒருவரான பவன்குமார் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதையடுத்து அவரின் உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர் காணாமல் போனது எப்படி அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.