தேனி மாவட்டம் வீரபாண்டி கோவில் திருவிழாவில் ராட்டினத்துக்கு மின் இணைப்பு கொடுக்கச் சென்றபோது, அலுமினியத்தால் ஆன ஏணியில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார்.
வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் பொழுதுபோக்குக்காக ராட்சத ராட்டினம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ராட்டினத்துக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக முத்துக்குமார் என்ற தொழிலாளி, அலுமினிய ஏணியுடன் மின் கம்பம் அருகே சென்றுள்ளார்.
ஏணியை மின்கம்பத்தில் சாய்க்க முயன்றபோது, அதன் மேல் முனைப் பகுதி உயர்மின்னழுத்தக் கம்பியில் உரசியது. இதில் முத்துக்குமாரின் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.