வன்செயல்களுக்காக மக்களை ஒன்று திரட்டும் 59 வட்ஸ்அப் குழும்பங்கள்

வன்செயல்களுக்காக அழைப்பு விடுக்கும் 59 வட்ஸ்அப் குழுமங்களின் அட்மின்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பொலிசார் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக கணனி குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். வன்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை 1997 அல்லது 118 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல்களை வழங்க முடியும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ரெல் ஐ ஜி பி அட் பொலிஸ் டொட் ஜி ஓ வி டொட் எல் கே tell igp@police.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவும் இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

வன்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு அனைத்து பொலி;ஸ் நிலையங்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் பொலிஸ் தலைமையகம் பணிப்புரை வழங்கியுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.