வரலாற்றில் உள்நாட்டுப் போர் நமக்கு பெரிய பாடத்தை அளித்திருக்கிறது: ஜெயவர்தனே

வரலாற்றில் உள்நாட்டுப் போர் நமக்கு பெரிய பாடத்தை அளித்திருக்கிறது என்று இலங்கை அணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹிலா ஜெயவர்தனே பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கையில் ஆட்சி நடத்தி வரும் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக்கோரி கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர்.

இரண்டு தினங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களின் கூடாரங்களை கிழித்தெறிந்து தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்கள் மீது போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இது பெரும் கலவரமாக மாறியது. ராகிந்தா ராஜபக்சே பதவி விலகியுள்ளார். மேலும், மகிந்த ராஜபக்சவின் பாரம்பரிய வீட்டை எரித்தனர். ராஜபக்ச குடும்பத்தினரின் வீடுகள், சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. 35 வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து மகிந்தா ராஜபக்சே கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினார். திருகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் மஹிலா ஜெயவர்தனே தனது ட்விட்டர் பக்கத்தில், “இனம், மதம் சார் வெறுப்புகள் மூலம் வரலாற்றில் உள்நாட்டுப் போர் நமக்கு பெரிய பாடத்தை அளித்திருக்கிறது. மேலும் தனிப்பட்ட திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. பிரிந்தால் வீழ்வோம்..ஒன்றிணைவோம் வலுவாக நிற்கிறோம். எப்பொழுதும் இலங்கையராகவே சிந்தியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.