சென்னை: இரு சக்கரம் மற்றும் நான்கு சங்கர வாகன நம்பர் பிளேட்டுகளில் அரசு வாகனங்கள் என்பதை குறிக்கும் வகையில், ‘அ’ மற்றும் ‘G’ எழுத்துக்கள் பதியப்படுவது குறித்து காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு வாகனம் அல்லாத வாகனங்களில் G அல்லது அ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்கு வரத்து காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து போக்குவரத்து காவல்தறை வெளியிட்டுள்ள அறவிப்பில், அரசு வாகனம் அல்லாத வாகனங்களில் தற்பொழுது தமிழகமெங்கும் பதிவெண் பலகையில் (Number Plate) G அல்லது அ என்ற எழத்துக்கள் எழுதப்பட்டோ அல்லது Sticker ஒட்டப்பட்டோ மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 3 உட்பிரிவு (K) -ன் படி அரசு வாகனம் என்றால் தமிழக அரசின் வாகனங்கள் மட்டுமே. அரசு வாகனங்களுக்கு வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு உள்ளது.
எனவே உரிய வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு பெற்ற தமிழக அரசின் வாகனங்களில் மட்டுமே G அல்லது அ என்ற எழுத்துக்கள் பயன்படுத்தப்பட வேண்டும். எனவே, தமிழ்நாடு அரசு வாகனங்களை தவிர மற்ற அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களில் G அல்லது அ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.