"விமானத்தை எப்படி ஓட்டுவது?" நடுவானில் மயங்கிய விமானி., அடுத்து நடந்த ஆச்சரிய சம்பவம்! வைரலாகும் வீடியோ


அமெரிக்காவில் இதுவரை பறக்கும் அனுபவமே இல்லாத பயணி ஒருவர் விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த இந்த சம்பவம் குறித்து மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதுவரை திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருக்கக்கூடிய ஒரு காட்சி இம்முறை நிஜமாக நடந்துள்ளது.

பஹாமாஸில் உள்ள மார்ஷ் துறைமுகத்தில் உள்ள லியோனார்ட் எம். தாம்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட செஸ்னா 208 கேரவன் விமானம் புளோரிடாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அதில் இரண்டு பயணிகள் இருந்தனர்.

அப்போது விமானத்தை இயக்கிய விமானிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு செயலற்று கிடந்துள்ளார். விமானியின் நிலை என்னவென்று உடனடியாக தெரியவில்லை.

அப்போது நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த, பெயர் தெரியாத பயணி ஒருவர் விமானத்தை இயக்க முடிவு செய்தார். ஆனால் பிரச்சனை என்னவென்றால், அவருக்கு விமத்தை பறக்கத் தெரியாது.

இருப்பினும், அவர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருடான் தொடர்பு கொண்டு நிலைமையை விவரித்துள்ளார். பின்னர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாலாருடன் தொடர்ந்து இணைப்பில் இருந்தபடி, அவர்கள் கூறுவதை கேட்டு அதன்படி விமானத்தை இயக்கினார்.

விமானம் போகா ரேடன் கடற்கரையில் பறந்து கொண்டிருந்ததைக் கண்டுபிடித்த அந்த பயணி, பாம் பீச் விமான நிலையத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரின் அறிவுறுத்தலுடன் விமானத்தை தரையிறக்கினார்.

விமானம் பத்திரமாக தரையிறங்கியது, யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அந்த ஒற்றை எஞ்சின் விமானத்தை ஓட்டியவ அந்த பயணி உடனடியாக உலகளவில் ஹீரோவானார். பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர் ன் தனது கர்ப்பிணி மனைவியைப் பார்க்க வீட்டிற்குச் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.


Cessna 208 Caravan போன்ற சிறிய டர்போபிராப் விமானங்கள், குறிப்பாக அது பிரைவேட் விமானமாக இருக்கும்போது, அதை ஒரே ஒரு பைலட்டுடன் பறப்பது அசாதாரணமானது அல்ல என்று ஒரு விமானப் போக்குவரத்து நிபுணர் கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.