விரைவில் வெளியாகிறது வாத்தி பட பர்ஸ்ட் லுக்
தனுஷின் நேரடி தெலுங்கு படமான “வாத்தி'' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். நடிகர் சாய் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வாத்தியாராக தனுஷ் நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.