இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் குறைவாக உள்ளதால், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும் போது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நிறுவனங்கள் பணிக்கு எடுக்கும் விகிதம் 5 சதவீதம் வரை உயரும் என கூறப்படுகிறது.
கொரோனா தடுப்பூசியை பெரும்பாலானவர்கள் செலுத்துக் கொண்டதால் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. 77 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகங்களுக்கு அழைத்துள்ளன.
டெல்லிவரி ஐபிஓ இன்று தொடக்கம்.. விலை எவ்வளவு? வாங்கலாமா?

புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்திய நிறுவனங்கள் புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுக்கும் விகிதமானது 20 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் அது 3 சதவீதம் அதிகரித்து 23 சதவீதமாக இருக்கும் என வேலைவாய்ப்பு இணையதளங்கள் கூறுகின்றன.

ஃப்ரெஷர்கள்
மார்ச் காலாண்டில் 10-ல் 8 ஃப்ரெஷர்களை நிறுவனங்கள் பணிக்கு எடுத்துள்ளன. தகவல் தொழில்நுட்ப துறையில் 85 சதவீதமும், தொலைத்தொடர்புத் துறையில் 79 சதவீதமும், இ-காமர்ஸ் துறையில் 75 சதவீதமும் ஃப்ரெஷர்களை பணிக்கு எடுத்துள்ளனர்.

இண்டீட்
கொரோனா தொற்று குறைந்துள்ளதால், வேலைவாய்ப்பு சந்தையில் நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது என இண்டீட் நிறுவனத்தின் அதிகாரி சாஷி குமார் கூறியுள்ளார்.

ஊழியர்கள் மனநிலை
மேலும் இப்போது 48 சதவீத ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்வதையே விரும்புகிறார்கள். 31 சதவீதத்தினர் வீட்டிலிருந்தும், ஹர்பிரிட் மாடலில் வேலை செய்யவும் விரும்புகின்றனர். வரும் காலாண்டுகளில் வேலைவாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும். அலுவலகம் செல்லும் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய தொழில்நுட்பங்கள்
டேட்டா சையின்ஸ், அனலிட்டிக்ஸ் மற்றும் அதை சார்ந்த பிற தொழில்நுட்பங்களில் வேலைவாய்ப்புகள் உருவாகி அதிக தேவை உள்ளதாக கூறப்படுகிறது.

வேலைதேடுபவர்கள்
கொரோனா பரவல் காரணமாகப் பலர் வேலைவாய்ப்பை இழந்த நிலையில் இப்போது சாதகமான தவல்கள் வருவது வேலைதேடுபவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக உள்ளது.
Hiring boom begins in India as Covid-19 infections decrease: Report
Hiring boom begins in India as Covid-19 infections decrease: Report | வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு.. ஸ்வீட் எடுங்க.. கொண்டாடுங்க!