ஏப்ரல் 25 அன்று ட்விட்டரை ரூ.3.3 லட்சம் கோடிக்கு வாங்கியதில் இருந்து, டெஸ்லா CEO மற்றும் SpaceX நிறுவனர்
எலான் மஸ்க்
பல சந்தேகத்திற்கிடமான ட்வீட்டுகளை பதிவிட்டு வருகிறாட். இதைத் தொடர்ந்து, மே 9 அன்று, எலான் மஸ்க் “நான் மர்மமான சூழ்நிலையில் இறந்தால்” என்று ட்வீட் செய்து பீதியைக் கிளப்பினார்
இதற்கு உடனடியாக பதில் கொடுத்த மிஸ்டர் பீஸ்ட் என அழைக்கப்படும் யூடியூப் நட்சத்திரமான ஜிம்மி டொனால்ட்சன், “அப்படி நடந்தால், எனக்கு ட்விட்டரை வழங்குவீர்களா” என்று ரிப்ளே செய்திருந்தார். அதற்கு மஸ்க், “சரி” என்று பதிலளித்தார். “நகைச்சுவைகள் ஒருபுறம் இருக்க, பாதுகாப்பாக இருங்கள்!” என்று யூடியூபர் அதற்கு பதிலளித்திருந்தார்.
TikTok: விண்வெளியில் டிக்டாக் வெளியிட்ட பெண் – வைரல் வீடியோ!
யார் இந்த மிஸ்டர் பீஸ்ட்?
மிஸ்டர் பீஸ்ட், சிக்கலான மற்றும் விலையுயர்ந்த ஸ்டண்ட்களை செய்யும் யூடியூப் படங்களை தயாரிப்பதில் மிகவும் பிரபலமானவர். அவரது யூடியூப் சேனலுக்கு 9.5 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். மேலும் 2021 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் சிறந்த படைப்பாளி என்னும் விருதை அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
டொனால்ட்சன் தனது யூடியூப் சேனலான ‘MrBeast’ இல் தனது மூர்க்கத்தனமான ஸ்டண்ட் வீடியோக்களின் மூலம், கணிசமான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். மேலும், பரிசுகளை தாராளமாக கொடுப்பதற்காகவும் அவர் நற்பெயரைப் பெற்றுள்ளார்.
2020 இல், அவர் தனது Beast Philanthropy சேனலை உருவாக்கினார். இது அதன் விளம்பர வருவாய், ஸ்பான்சர் ஆகியவற்றில் வாயிலாகக் கிடக்கும் 100 விழுக்காடு வருவாயை உணவு வங்கிகளுக்கு வழங்குகிறது. டொனால்ட்சன் தனது YouTube வீடியோக்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் $1 மில்லியன் டாலர் சம்பாதிப்பதாகக் கூறப்படுகிறது.
Edit Button: ட்விட்டரில் அதிரடி மாற்றம் – கோரிக்கை வைத்த தாய்!
வைரலான எலான் மஸ்க் ட்வீட்… தொடர்ந்து இணைந்திருங்கள்