Nothing: நத்திங் போன் பிளிப்கார்ட்டில் வெளியாகிறது – டீஸ் செய்த நிறுவனம்!

ஸ்மார்ட்போன் பயனர்களிடத்தில் இருக்கும் ஒரே ஒரு ஏக்கத்தை போக்கும் வகையில் தான் இந்த நிறுவனம் தற்போது செயல்பட்டுவருகிறது. ஆம்,
நத்திங்
நிறுவனத்தின் மீது பயனர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். அதனை நிவர்த்தி செய்யும் விதமாக நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை வெளியிடுவதாக அறிவித்தது.

அதனுடன், புதிய
NothingOS
வெளியிடப்படும் என்று கூறியிருந்தது. ஆனால், ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கு முன்பே, நத்திங் ஓஎஸ் ஸ்கின்னை வெளியிட்டது. இது முதலில், பெரும்பாலான பயனர்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிறுவனம் வெளியிட்ட புதிய பீட்டா வெர்ஷன், சந்தையில் உள்ள பெரும்பாலான மொபைல்களுக்கு ஏற்றதாக இருந்தது.

இந்த சூழலில், நத்திங் நிறுவனம் புதிய டீசரை வெளியிட்டுள்ளது. அதில், கோடை காலம் முடிந்து மக்கள் குளிர்ச்சியாக உணரும் தருணத்தில், தங்கள் நிறுவனத்திடம் இருந்து கூலான செய்தி அவர்கள் காதுகளை வந்தடையும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல்,
நத்திங் போன் 1
ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Elon Musk Tweet: ‘நான் மர்மமான முறையில் இறந்தால் …’ – எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி ட்வீட்!

நத்திங் போன் 1 அம்சங்கள் (எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்)

முன்னதாக, நத்திங் போன் 1 குறித்த செய்தியை வெளியிட்ட நிறுவனத்தின் தலைவர் கார்ல் பெய், புதிய போன் தயாரிப்புக்காக குவால்காம் ஸ்னாப்டிராகன் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த தகவலின்படி நிறுவனம் வெளியிடும் ஸ்மார்ட்போனில், ஸ்னாப்டிராகன் நிறுவனத்தின் புதிய Snapdragon 8 Gen 1 சிப்செட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான நத்திங் இயங்குதளம் நிறுவப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. பெரிய ஆர்பாட்டங்கள் அல்லது ஆரவாரம் அற்ற போனாக இது இருக்கும் என்றும், பயனர்களுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இதில் அடங்கி இருக்கும் என்றும் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கலாம். திறன்வாய்ந்த கேமரா, அதிக சக்தியை வெளிப்படுத்தும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் சிப்செட் என ஸ்மார்ட்போன் வேற லெவலில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள் நிறுவனத்துக்கு போட்டியாக நாங்கள் மட்டும் தான் உருவெடுத்துள்ளோம் என்று கூறும் நத்திங், இதன் காரணமாக சிறந்த கேமரா அம்சங்களையும் நிறுவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை காலம் முடிந்ததும் வெளியாகும் நத்திங் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் குறித்து எந்த கணிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

TikTok: விண்வெளியில் டிக்டாக் வெளியிட்ட பெண் – வைரல் வீடியோ!

நத்திங் லாஞ்சர் பீட்டா பதிப்பு கிடைக்கும் போன்கள்

இதற்கிடையில், நத்திங் லாஞ்சரின் பீட்டா பதிப்பு இப்போது ஆண்ட்ராய்டு 11 மற்றும் அதற்குப் பிந்தைய அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் வழியாக இந்த லாஞ்சரை பதிவிறக்கம் செய்யலாம்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

முதலில், இந்த லாஞ்சர் Samsung Galaxy S21 series, Samsung Galaxy S22 series, Google Pixel 5 மற்றும் Google Pixel 6 ஆகியவற்றுடன் மட்டுமே இணக்கமாக இருந்தது.
Nothing Launcher
ஆனது, வளர்ச்சியில் இருக்கும்
Nothing
OS அனுபவத்தை பயனர்களுக்கு அளிக்கிறது.

நாம் பயன்படுத்தி பார்த்த வகையில், நத்திங் லாஞ்சர் மிக எளிமையாக, மென்மையாக இருக்கிறது. ஆனால், நிறைய அம்சங்கள் அதில் விடுபட்டுள்ளது. புதிய அப்டேட் மூலம், இவை அனைத்து சரிசெய்யப்படும் என நிறுவனம் கூறியிருக்கிறது.

மேலதிக செய்திகள்:
Upcoming Phones May 2022: கூகுள் பிக்சல் முதல் விவோ X80 வரை டாப் கிளாஸ் போன்கள் வெளியாக தயார்!Cyclone Asani: அசானி புயலை நீங்களும் கண்காணிக்கலாம்!Russia Ukraine News: போர் காலத்தில் உக்ரைன் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் 5 ஆப்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.