Tamil News Today Live: இலங்கையில் பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கு தற்காலிக தடை!

Tamil Nadu News Updates: வங்க கடலில் ஆந்திராவின் மச்சிலிப்பட்டணத்துக்கு தென்கிழக்கே 80 கிலோ மீட்டர் தொலைவில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த அசானி, புயலாக வலுவிழந்தது; நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 17 விமானங்கள் ரத்து

பில்கேட்ஸூக்கு கொரோனா தொற்று

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் இருப்பதால், தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.

இலங்கை கலவரம்

ராஜபக்ச குடும்பத்தின் சொத்துகள், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் 40க்கும் மேற்பட்ட வீடுகளை தீக்கிரையாக்கப்பட்டன. அம்பாந்தோட்டையில் ராஜபக்சவின் தந்தை சிலை தகர்ப்பு

பெட்ரோல் நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 35வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ110.85-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ100.94-க்கும் விற்பனை

ஐபிஎல் : குஜராத் அணி அபார வெற்றி

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி. முதலில் ஆடிய குஜராத் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் சேர்ப்பு .தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 13.5 ஓவர்கள் முடிவில் 82 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்

Live Updates
12:40 (IST) 11 May 2022
பொறியியல் கலந்தாய்வு?

நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகு, கல்வியாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசித்து பொறியியல் கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்!

12:40 (IST) 11 May 2022
சஜித் பிரேமதாச இலங்கை அதிபராக பதவியேற்க தயார்!

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதவி விலகினால், புதிய பிரதமராக பதவியேற்க எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தயார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல பேட்டி அளித்துள்ளார்.

12:39 (IST) 11 May 2022
இலங்கையில் பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கு தடை!

இலங்கையில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகத்திற்கு தற்காலிக தடை விதித்து இலங்கை பெட்ரோலிய நிறுவனம் அறிவித்துள்ளது.

12:39 (IST) 11 May 2022
இலங்கை ராணுவம் சிறப்பு பாதுகாப்பு!

இலங்கையில் அசாதாரண சூழல் நிலவிவரும் நிலையில், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இலங்கை ராணுவம் சிறப்பு பாதுகாப்பில் முழுமையாக ஈடுபட்டுள்ளது.

12:05 (IST) 11 May 2022
தேச துரோக சட்டத்தை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

தேச துரோக சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தேசத் துரோக சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்யும் வரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யக்கூடாது, விசாரிக்கவும் கூடாது என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

11:52 (IST) 11 May 2022
ஆடிட்டர் கொலை.. 4 பேர் கைது!

தஞ்சை கரந்தையில் ஆடிட்டர் மகேஷ்வரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கார்த்தி, மணி, அரவிந்த் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

11:50 (IST) 11 May 2022
தேச துரோக வழக்குகளுக்கு தடை!

தேச துரோக வழக்குகள் பதிவு செய்வதை நிறுத்த முடியாது. அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி தேச துரோக வழக்குகளுக்கு தடை விதிப்பது சரியான அணுகுமுறையல்ல என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

11:20 (IST) 11 May 2022
மத்திய உள்துறை எச்சரிக்கை!

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தேச விரோதிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதால், கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்த மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

11:19 (IST) 11 May 2022
இலங்கையின் இந்திய தூதரகம் ட்வீட்!

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையில்லை. இலங்கையின் ஜனநாயகம் மற்றும் பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா முழு உறுதுணையாக இருக்கும் – இலங்கையின் இந்திய தூதரகம் ட்வீட்!

11:19 (IST) 11 May 2022
இலங்கையில் இன்று ஆலோசனை!

இலங்கையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்த்தனே இன்று ஆலோசனை நடத்த இருப்பதாகவும், பிற்பகல் 3 மணியளவில் காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் அதிபர் கோட்டபய ராஜபக்சே பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

11:18 (IST) 11 May 2022
ராஜபக்சே தங்கியிருக்கும் இடம் தெரிந்தது!

இலங்கை திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள Pillow House எனப்படும் பங்களாவில் ராஜபக்சே மற்றும் குடும்பத்தினர் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10:48 (IST) 11 May 2022
வல்லூரில் 500 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு

வல்லூர் அனல் மின்நிலைய ஆவது அலகில் 500 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு . கொதிகலன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்உற்பத்தி பாதிப்பு

10:44 (IST) 11 May 2022
ஏற்றுமதி கூட்டமைப்பில் 5 ஆயிரம் தமிழர்கள் – மு.க ஸ்டாலின் பெருமிதம்

இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பில் உள்ள 35 ஆயிரம் ஏற்றுமதியாளர்களில், 5 ஆயிரம் பேர் தமிழர்கள். தென் மண்டலத்தில் ஏற்றுமதியில் சிறந்து விளங்குவது தமிழ்நாடு என்பதில் பெருமை. 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி என்பதே இலக்கு என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

10:34 (IST) 11 May 2022
கோயிலுக்குள் பட்டியலினத்தவர்களை அனுமதிக்க மறுப்பு

திண்டுக்கல் பழனி சித்தரவு கிராமத்தில் உச்சகாளியம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்க மறுப்பதாக புகார். இதுகுறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்

10:00 (IST) 11 May 2022
கடந்த 24 மணி நேரத்தில் 2,986 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 54 பேர் உயிரிழந்துள்ளனர். 19,494 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

09:38 (IST) 11 May 2022
கடலூரில் போலீசார் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

பெரியகுப்பம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கொள்ளை அடிக்க வந்த 20 பேர், போலீசார் மீது பெட்ரோல் குண்டுவீச்சு. போலீசார் மற்றும் தொழிற்சாலை காவலர்கள் மீது 6 பெட்ரோல் குண்டுகளை வீசினர்

09:32 (IST) 11 May 2022
இன்றைய தங்கம் விலை நிலவரம் மே 11

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹472 குறைந்து, ரூ38,296க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ4787க்கு விற்பனை

08:39 (IST) 11 May 2022
இலங்கை கலவரம் – ஆஜராக உத்தரவு

இலங்கையின் ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, காவல்துறை தலைவர் விக்ரமரத்ன ஆகியோர் மனித உரிமை ஆணைக்குழு முன் ஆஜராக உத்தரவு. இருவரும் காலை 10 மணிக்கு மனித உரிமை ஆணைக்குழு முன் ஆஜராக அறிவுறுத்தல்

08:30 (IST) 11 May 2022
இலங்கை ஊரடங்கு நீட்டிப்பு

போர்க்களமாக காட்சியளிக்கும் இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, நாளை காலை 7 மணி வரை நீட்டிப்பு!

08:10 (IST) 11 May 2022
ட்ரம்ப் மீதான ட்விட்டர் தடை நீக்கப்படும் – எலான் மஸ்க்

அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

08:09 (IST) 11 May 2022
13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.