TNPSC: குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. டவுன்லோடு செய்வது எப்படி?

 TNPSC Group-2 Hall Ticket:  தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்

இந்தாண்டு நடைபெறவுள்ள குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பிரிவில் காலியாகவுள்ள 5 ஆயிரத்து 400 பணியிடங்களுக்கு சுமாா் 11 லட்சம் போ் விண்ணப்பித்திருந்தனர். தமிழகம் முழுவதும் மே 21ஆம் தேதி குருப் 2 தேர்வுகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் இன்று, குரூப் 2 மற்றும் குரூப் -2ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது

குரூப் 2 ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி?

  • தேர்வர்கள் முதலில், டின்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ தளமான http://www.tnpsc.gov.in செல்ல வேண்டும்
  • அங்கு, ஹோம் பேஜில் recruitment notification செக் செய்ய வேண்டும்.
  • அதில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஹால் டிக்கெட் சேர்ச் செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக, குரூப் 2 அட்மிட் கார்டு லிங்க் கிளிக் வேண்டும்.
  • பின்னர், திரையில் பெயர், அப்லிகேஷன் நம்பர் போன்ற லாகின் விவரங்களை பதிவிட வேண்டும்
  • இறுதியாக சப்மிட் பட்டன் கொடுக்க வேண்டும். தற்போது, உங்கள் திரையில் குரூப் 2 ஹால் டிக்கெட் தோன்றும்
  • பின்னர், அதிலிருக்கும் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை ஒருமுறை செக் செய்து கொள்ளுங்கள்
  • இறுதியாக, ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்து, தேர்வுக்கு அதன் பிரிண்ட் அவுட் எடுத்துச்செல்லுங்கள்.

குறிப்பு: டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத ஹால் டிக்கெட் கொண்டு செல்வது கட்டாயமாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.