வம்சி பைடிபலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என பை-லிங்குவலாக உருவாகும் விஜய் 66 படத்தில் ஹீரோயின் ராஷ்மிகா தான்.
பிதா மகன் படத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பால் பலரையும் கவர்ந்தவர் சங்கீதா. மகேஷ்பாபுவின் `சரிலேரு நிக்கேவரு’ படத்தில் ராஷ்மிகாவுக்கு அம்மா கேரக்டரில் இவர் நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் இது யோகி பாபுவின் Era. காமெடி கேரக்டரில் நடித்து வரும் யோகி பாபு விஜய்யின் இந்த படத்தில் இணைகிறார்.
கில்லி படத்தில் விஜய்க்கு டப் கொடுத்த பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் என்னவாக நடிக்கிறார் என்பது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
இவரும் தெலுங்கு ஸ்டார் தான். முன்னா பாய் எம்.பி.பி.எஸ் இந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி உடன் நடித்தவர் ஸ்ரீகாந்த்.
சம்யுக்தா பிக்பாஸில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானவர். தற்போது விஜய் 66-ல் இணைந்திருக்கிறார்.
ஷாம் 12பி படத்தில் அறிமுகமாகி லேசா லேசா, இயற்கை உள்ளிட்ட ஏராளமான தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவர்.
பிரபு ஹீரோவாக, ஹீரோவின் அப்பாவாக, குணச்சித்திர நடிகராக பல வேடங்களில் நடித்தவர். புலி, தெறி உள்ளிட்ட படங்களில் ஏற்கெனவே விஜய் உடன் பணியாற்றியிருக்கிறார்.
தென்னிந்திய மக்களுக்கு சரத்குமாரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. சரத்குமாரும் பிரபும் இதற்கு முன்பே இணைந்து நடித்திருக்கின்றனர்.
ஜெயசுதா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இவர் நடிக்காத தென்னிந்திய மொழிகளே இல்லை. இவர் செகந்திராபாத் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.
தெலுங்கு சினிமாவின் ஆஸ்தான இசையமைப்பாளர் தமன். ஏற்கனவே வம்சியின் ஹிட் படமான ‘பிருந்தாவனம்’ படத்தின் இசையமைப்பாளர். இவர்கள் கூட்டணியில் ‘விஜய்66’ இரண்டாவது படம்.
எடிட்டர் பிரவீன் கே எல். மாநாடு படத்தின் எடிட்டிங்கில் நம்மை மிரள வைத்தவர். விஜய் 66 படத்திற்கு எடிட்டர் இவர்தான்.
பாடலாசிரியர் விவேக், ஒளிப்பதிவு கார்த்திக் பழனி, தயாரிப்பு தில் ராஜு என பெரிய Cast & Crew உடன் களமிறங்கியிருக்கும் விஜய் 66 படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்காக அதிகரித்திருக்கிறது.