கொழும்பு,
அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடி மற்றும் போராட்டங்களால், தினமும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ராணுவத்தினர் பாதுகாப்பு அளித்தனர்.
இந்த கூட்டத்தில், அதிபருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினாலும் கூட பதவி நீக்கம் செய்ய முடியாது என்பதால், அதிபருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அவநம்பிக்கையை வெளிப்படுத்தலாம் என முடிவுசெய்யப்பட்டது. அதன்படி வரும் 17 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட உள்ளது.