புதிதாக நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படாதென தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்ட எவருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டாம் என ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 15 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று அல்லது நாளை ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமாக பதவியேற்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது